34.7 C
Chennai
Thursday, May 23, 2024
ld3785
தலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

1. கீரைகள்

தினம் ஒரு கீரை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் அழகாக, அடர்த்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் உள்ள வைட்டமின் பி, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என ஒவ்வொன்றுமே கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. குறிப்பாக கீரைகள் உண்பதன் மூலம் ரத்தச் சிவப்பணுக்கள் கூந்தல் நுண்ணறைகளுக்கு ஆக்சிஜனை அதிகம் எடுத்துச் செல்ல வழி வகுக்கப்படும்.

2. சால்மன் மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது குறைந்தால் கூந்தல் வறண்டு பொலிவற்று உயிரற்றுக் காட்சியளிக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவுகளில் குறைவாகவே இருக்கிறது. சால்மன் வகை மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கிற ஒமேகா 3, கூந்தல் நுண்ணறைகளுக்கு ஆரோக்கியத்தை அளித்து வளர்ச்சியைத் தூண்டுவதுடன், கூந்தல் பளபளப்பையும் அதிகரிக்கிறது.

3. பருப்பு வகைகள்

புரதக் குறைபாட்டுக்கு மட்டுமின்றி, துத்தநாகக் குறைபாட்டுக்கும் பருப்பு வகைகள் உதவும். புரதம்தான் கூந்தல் ஆரோக்கியத்துக்கான அடிப்படை. சாலட், சூப் என எதில் எல்லாம் முடியுமோ எல்லாவற்றிலும் பருப்பு சேர்த்து உண்பது கூந்தல் ஆரோக்கியம் காக்கும்.

4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

எக்கச்சக்கமான பீட்டா கரோட்டின் சத்துகளை உள்ளடக்கியது இது. பீட்டா கரோட்டின் என்பது உடலால் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்படக்கூடியது. வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்பட்டு, அது மண்டைப் பகுதியில்
பிரதிபலித்து பொடுகுப் பிரச்னையைஏற்படுத்தும். அதைத் தவிர்க்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு உதவும்.

5. முட்டை

கூந்தல் ஆரோக்கியத்துக்காக வெளிப்பூச்சாக உபயோகிக்கவும் உள்ளுக்கு சாப்பிடவும் முட்டை உகந்தது. இதில் உள்ள பயோட்டின் என்கிற வைட்டமின் பி, கூந்தலின்ஆரோக்கியம் மற்றும் பளபளப்புக்கு உதவும்.

6. சிவப்பு கொய்யா

ஒரு கப் கொய்யாவில் 377 மி.கி. அளவு வைட்டமின் சி சத்து கிடைக்கும். தினசரி தேவையைவிட இது 4 மடங்கு அதிகம். வைட்டமின் சி சத்தானது, கூந்தலை உடையாமல் உறுதியாக வைக்கும்.

7. லவங்கப்பட்டை

காபி, ஓட்ஸ் கஞ்சி என எதில் வேண்டுமானாலும் சிட்டிகை லவங்கப் பட்டைத் தூளைத் தூவிக் குடிக்கலாம். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்தும்.

8. வால்நட்

இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் சத்துகள் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடைவதைத் தடுக்கும்.

9. கேரட்

கண்களுக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நல்லது கேரட். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது கூந்தல் அதன் இயற்கையான எண்ணெய் பசையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவதால் வறட்சி தவிர்க்கப்படுகிறது.

10. சிப்பி

உடலுக்கு மிக அவசியத் தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் துத்தநாகம். அதை அதிகளவில் கொண்டது சிப்பி. மண்டைப் பகுதி யில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை ஆரோக்கியமாக வைக்கவும், ஆங்காங்கே சொட்டை விழுவதைத் தவிர்க்கவும் இது உதவும்.

ld3785

Related posts

உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

உங்க நெற்றி மேல ஏறிட்டே இருக்கா? முடி உதிர்வை தடுக்க அற்புதமான டிப்ஸ்!

nathan

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! என்னென்ன செய்யலாம் கருமையான கூந்தலை பெற..!

nathan

வாரம் ஒருமுறை தலைக்கு கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தலைமுடியை வலுவடையச் செய்யும் எண்ணெய்

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

இந்த ஒரு ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, வேகமாய் முடி வளரும்!

nathan