31.9 C
Chennai
Wednesday, May 29, 2024
29
பழரச வகைகள்

ஃபலுடா மில்க் ஷேக்

என்னென்ன தேவை?

பேசில் (Basil) விதைகள் – 1/2 கப்,
ஃபலுடா நூடுல்ஸ் – 1/2 கப்,
குங்குமப்பூ – சிறிதளவு,
ரோஸ் சிரப் – 3 டீஸ்பூன்,
குளிர வைத்த பால் – 2 கப்,
வெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப்,
பாதாம் பருப்பு (துருவியது) – 2 டீஸ்பூன்,
பிஸ்தா (பொடித்தது) – 3 டீஸ்பூன்,
பழங்கள் (வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள் – இதில் ஏதாவது ஒன்று) – 1/2 கப்,
ஜெல்லி க்யூப்ஸ் (விருப்பப்பட்டால்) – 1/4 கப்,
சர்க்கரை – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கொதித்த நீரில் ஃபலுடா நூடுல்ஸை சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரில் போட்டு, வடிகட்டவும். தனியாக எடுத்து வைக்கவும். பேசில் விதைகளை 1 கப் தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். குளிர்ந்த பாலில் ரோஸ் சிரப்பை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம். பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். தோலை நீக்கிவிடவும்.

பருகும் முன் அலங்கரிக்கும் முறை நீண்ட கண்ணாடி டம்ளரில் பாதி நூடுல்ஸை போட்டு, அதன் மேல் பேசில் விதையில் 1/4 கப்பை போட்டு, பாதிப் பழங்களையும் அதன் மேல் அலங்கரித்து ரோஸ் மில்க் பாதியை ஊற்றவும். பின்பு பாதி ஐஸ்க்ரீம் சேர்த்து, இப்படி மறுபடியும் ஒன்றன் பின் ஒன்றாக மறுபடியும் ஃபலுடா நூடுல்ஸை போட்டு பின்பு பேசில் விதை மீதமுள்ள பழங்கள், ரோஸ் மில்க், ஐஸ்க்ரீம் கடைசியில் பிஸ்தா, பாதாம் பருப்புகளை போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.29

Related posts

வாழைத்தண்டு மோர்

nathan

எளிமையான ஆரஞ்சு கீர்

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

nathan

மாதுளை ரைத்தா

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

வைட்டமின் காக்டெய்ல்

nathan