1 toor dal kofta 1659616843 1
Other News

மாலை வேளையில் துவரம் பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 1 கப் (4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

* கறிவேப்பிலை – ஒரு கையளவு

* கொத்தமல்லி – ஒரு கையளவு

* பட்டை – 1 இன்ச்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* அரிசி மாவு – 1/2 கப்

* கடலை மாவு – 1/2 கப்

* பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே மிக்சர் ஜாரில் எண்ணெய் மற்றும் மாவுகளைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருமுறை அரைத்து, பாத்திரத்தில் உள்ள துவரம் பருப்புடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

Toor Dal Kofta Recipe In Tamil
* பிறகு அதில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், துவரம் பருப்பு கோஃப்தா/உருண்டை தயார்.

Related posts

இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்…

nathan

கொடிகட்டி பறந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா?புகைப்படம்

nathan

தனுஸை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்க இது தான் உண்மை காரணம்!

nathan

வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் லாஸ்லியா

nathan

சென்னை வந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தங்கம் பறிமுதல்

nathan

மாட்டுப் பண்ணை: பால், சாணம் விற்பனை; மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கும் ஐடி தம்பதி!

nathan

அபிஷேக் சைதன்யாவை மணந்தபோது-ஒரே பாலின ஜோடி

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவரா?

nathan

கேரளாவில் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த பெண் டாக்டருக்கு ஏற்பட்ட விபரீதம்!

nathan