29.5 C
Chennai
Sunday, May 19, 2024
2 red sauce pasta 1669111609
Other News

சுவையான ரெட் சாஸ் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப்

* தண்ணீர் – 4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (அரைத்தது)

* சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்

* மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சீஸ் – அலங்கரிக்க தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பாஸ்தாவை வேக வைக்க வேண்டும்.

* பாஸ்தா நன்கு வெந்ததும், 3/4 கப் பாஸ்தா வேக வைத்த நீரை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, எஞ்சிய நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Red Sauce Pasta Recipe In Tamil
* பிறகு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, பச்சை வாசனை போக குறைந்தது 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சில்லி ப்ளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப், மிளகுத் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

* பின் அதில் எடுத்து வைத்துள்ள பாஸ்தா நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக அதன் மேல் துருவிய சீஸைத் தூவினால், சுவையான ரெட் சாஸ் பாஸ்தா தயார்.

Related posts

அந்த இடத்தில் கை வைத்த நபர்..! – உச்ச கட்ட கோபத்தில் நயன்தாரா..!

nathan

கேரளாவில் சீரியல் நடிகைகள்

nathan

இளையராஜாவின் மகள் பவதாரணி சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

nathan

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது..புகைப்படங்கள்

nathan

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

nathan

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் திருமணத்திற்கு அவசியம் பார்க்க வேண்டும்-தெரிந்துகொள்வோமா?

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

ராகு கிடுக்குப்புடி .. முரட்டு அடி 3 ராசிகளுக்கு தான்

nathan