32.2 C
Chennai
Wednesday, May 29, 2024
சட்னி வகைகள்

பாகற்காய் சட்னி

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 1
தேங்காய் துருவல் – 2-3 டேபிள் டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 5-6
புளி – 1 சிறிதளவு
வெல்லம் – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு.
எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:
• முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றியிருக்கும். அந்த நீரை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.
• பின் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
• பின்பு மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வர மிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
• வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
• சட்னியின் நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறியதும் இறக்கினால் பாகற்காய் சட்னி தயார்.

Related posts

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika

இஞ்சி தேங்காய் சட்னி

nathan

சுவையான முந்திரி சட்னி

nathan

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி -செய்முறை

nathan

லெமன் சட்னி

nathan

சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்முறை

nathan

சுவையான தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம்….

nathan