மருத்துவ குறிப்பு

மருந்துகள் எவ்வாறு உடல் எடையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

கேட்பதற்கு அதிர்ச்சியாக தான் இருக்கும், ஆனால் நாம் சாப்பிடும் மாத்திரைகளும், வலி நிவாரணிகளும் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் பெரிய இடையூறாக அமைகிறது. குறிப்பாக இதனால் தவிர்க்க முடியாத அளவில் உடல் எடை அதிகரித்து விடும்.

மருந்துகள் சுலபமாக கிடைக்கப்படுவதாலும், நம்மால் நேரடியாக வாங்க முடிவதாலும் தான், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் நாமாகவே மருந்து கடைகளுக்கு நேரடியாக போய் மருந்துகளை வாங்கி விடுகிறோம். கிளினிகல் சைகாலஜிஸ்ட் & சைகோ அனலிடிக்கல் தெரப்பிஸ்ட், விமன்ஸ், புது டெல்லியை சேர்ந்த டாக்டர் புல்கிட் ஷர்மா, நம் உடல் எடையை அதிகரிக்க வைக்கும் 6 மருந்துகளைப் பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

மன அழுத்த எதிர்ப்பி

மன அழுத்த எதிர்ப்பி மருந்துகளை உண்ணுவதால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு ஒவ்வொரு தனிப்பட்ட நபரை பொறுத்து வேறுபடும். குறிப்பிட்ட சில மன அழுத்த எதிர்ப்பி மருந்துகளை உண்ணுவதால் சிலரின் எடை அதிகரிக்கும்; ஆனால் சிலருக்கோ எந்த ஒரு தாக்கமும் இருப்பதில்லை. உடல் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும் வகையில் பல மன அழுத்த எதிர்ப்பி மருந்துகள் உள்ளது. ட்ரைசைக்ளிக் மன அழுத்த எதிர்ப்பி மற்றும் மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள் போன்ற சில மன அழுத்த எதிர்ப்பி வகைகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அது உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடுமோ என்ற பயம் பலரை ஆட்கொள்ளும். கருத்தடை மாத்திரைகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பது பொதுவாக நிலைத்து வரும் நம்பிக்கையாகும். ஆனால் இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆராய்ச்சி சான்றும் கிடையாது. கருத்தடை மாத்திரைகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதை முடிவு செய்யும் அடிப்படையில் எந்த ஒரு சான்றும் இதுவரை அளிக்கப்படவில்லை.

தூக்க மாத்திரைகள்

பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முந்தைய காலத்து தூக்க மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தூக்க மாத்திரைகள் சற்று பாதுகாப்பானதே. மெலடோனினை கொண்டுள்ள மருந்துகள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். அதனால் தூக்கமின்மை சிகிச்சைக்கு மருத்துவ ரீதியான சிகிச்சையை நாடுவதை விட அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலி மாத்திரைகள்

ஒற்றைத் தலைவலி மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்கும் என பலரும் நம்புகின்றனர். சொல்லப்போனால், ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள் உடல் எடையை இழக்கச் செய்யுமே தவிர அதிகரிக்கச் செய்யாது. இருப்பினும், உடல் எடை இழப்பு மற்றும் இதர பக்க விளைவுகளை தவிர்க்க இவ்வகையான மருந்துகளைத் தவிர்க்கவும்.

ஸ்டெராய்டுகள்

பொதுவாகவே ஸ்டெராய்டுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், எந்தளவிற்கு உடல் எடை அதிகரிக்கிறது என்பது ஸ்டெராய்டு வகை, பயன்பாட்டின் நீளம், மற்றும் தனிப்பட்ட நபரின் உடல் அமைப்புக்குரிய குணாதிசயம் போன்றவற்றை பொறுத்தே அமையும். ஸ்டெராய்டு பயன்படுத்துவதால், உடலில் விரும்பத்தகாத இடங்களில் கொழுப்புகள் குவியும்.

டையபினீஸ், இன்சுலேஸ் (க்ளோர்ப்ரோபமைட்)

இந்த மருந்துகள் ஒன்று உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் அல்லது உடல் எடையை குறைக்கச் செய்யும். அது தனிப்பட்ட அந்த நபரை பொறுத்தது. அதனால் இவ்வகையான மருந்துகளை மருத்துவ வல்லுனரின் கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதனோடு சேர்த்து, சீரான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றியாக வேண்டும்.

19 1434715865 6insulin

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button