ஆரோக்கிய உணவு

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

வயிற்றைச் சுற்றித் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது பலரது கனவாக இருக்கலாம். இதற்கு அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமாக இருந்தாலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்பால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்பதும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.

உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை தொங்குகிறதா? அப்படியெனில் அவற்றைக் குறைக்க உங்களுக்கு ஒர் அற்புத பானத்தை தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாடம் குடித்து வந்தால், நிச்சயம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை மட்டுமின்றி, உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ளதையும் குறைக்கலாம்.

ஆனால் இந்த பானத்தை குடிக்கும் போது, அன்றாடம் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வர வேண்டும். மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரி, இப்போது உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அந்த அற்புத ஜூஸ் தயாரிக்க பயன்படும் பொருட்களையும், அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும் பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளது. இதுவும் எலுமிச்சை பழத்தைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருள். மேலும் இந்த பழம் ஜூஸிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தைத் தரும். அதே நேரம் இது கொழுப்புக்களை கரைக்கும் நொதிகளை வெளியேற்றி, கொழுப்பை கரைத்து எடையைக் குறைக்க உதவும்.

பார்ஸ்லி

அன்றாட உணவில் சிறிது பார்ஸ்லியை சேர்த்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், உடலின் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு, ஆங்காங்கு தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, விரைவில் எடை மற்றும் தொப்பை குறைய உதவி புரியும்.

தண்ணீர்

அன்றாடம் தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எடுக்கிறோமோ, அந்த அளவில் உடலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம். மேலும் தண்ணீர் உடலுறுப்புக்களின் சீராக இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். Show Thumbnail

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 3 ஆரஞ்சு – 1 பார்ஸ்லி – 1 கொத்து தண்ணீர் – 2.5 லிட்டர்

ஜூஸ் செய்யும் முறை

முதலில் 2 எலுமிச்சையை பிழிந்து 2.5 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் மீதமுள்ள 1 எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை வட்ட துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பார்ஸ்லியை நறுக்கி சேர்த்து நன்கு கலந்து, நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரையும். முக்கியமாக இந்த ஜூஸை, முதல் நாள் இரவே செய்து, மறுநாள் குடித்து வந்தால், அவற்றில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

23 1435038531 6 fat releasing juice

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button