33.3 C
Chennai
Saturday, May 18, 2024
si 2
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு சூப்பரான டிப்ஸ்!

கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே.

கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் மாஸ்க்
கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.

கொய்யா மற்றும் எலுமிச்சை மாஸ்க்
கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.

பப்பாளி மற்றும் பால்
பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள்.
அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை சாறு
இந்த ஹேர் மாஸ்க் ஸ்கால்பில் ஏற்படும் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, அரிப்பு, அதிக எண்ணெய் பசையான ஸ்கால்ப், இதனால் கூந்தல் உதிர்தல் போன்றவற்றிற்கு சிறந்தது.
ஆகவே சிறிது ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, அவற்றை நன்கு மசித்து, பால், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து, கூந்தல் மற்றும் தலைக்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரால் அலச வேண்டும்.
si 2

Related posts

பொடுகு தொல்லையை நீக்கி கூந்தல் வளர்ச்சியை தூண்டும் கடுகு எண்ணெய்

nathan

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஆளிவிதை ஜெல்!! ஒரு சூப்பர் டிப்ஸ்!!

nathan

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

nathan

தலை முடி மெல்லியதாகவும் சோர்வானதாகவும் இருப்பதற்கு பல காரணங்கள்….

nathan

முடி உதிர்தலை தடுக்க விளக்கெண்ணெய்

nathan

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா

nathan

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

nathan

முட்டை வெள்ளைக்கருவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தினால் பெறும் நன்மைகள்!

nathan

தலைமுடி வளர மருதாணி !

nathan