35 C
Chennai
Thursday, May 23, 2024
tha 1
எடை குறைய

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தக்காளி சாப்பிடுங்கள்!

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்ட்விச்சுடன் கரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது.
தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
tha 1

Related posts

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்…

nathan

இஞ்சியினால் எடை இழப்பதற்கான‌ 4 பயனுள்ள நன்மைகள்

nathan

ஒரு வாரத்தில் எடை குறைப்பது எப்படி?

nathan

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

இந்த டயட் அட்டவணையை மட்டும் பின்பற்றுங்க 7 நாட்களில் 10 கிலோ குறைக்கலாம்?

nathan

எப்படி உடல் எடையை குறைப்பது? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்

nathan