அசைவ வகைகள்

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

* மீன் – 1/2 கிலோ

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/2 கப்2 fishcurry 1672481609

செய்முறை:

* முதலில் மீனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் எண்ணெய் ஊறி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Chettinad Meen Kulambu Recipe In Tamil
* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதே மண் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button