சமையல் குறிப்புகள்

புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு…

* புடலங்காய் – 1 1/2 கப் (நறுக்கியது)

Related Articles

* பாசிப்பருப்பு – 1/2 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1/4 கப் (துருவியது)

* பச்சை மிளகாய் – 3

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிதுpudalangaipasiparuppukooturecipe 1668501141

செய்முறை:

* முதலில் குக்கரில் நறுக்கிய புடலங்காய் மற்றும் பாசிப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் உள்ள புடலங்காயில் போட்டு, சிறிது நீரை ஊற்ற வேண்டும்.

* பின் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளற வேண்டும்.

* இப்போது சுவையான புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button