cheese 2803421f
சிற்றுண்டி வகைகள்

சீஸ் ரோல்

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் – 6

சீஸ் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 3

எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தழை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முந்திரியை எண்ணெயில் வறுத்து, தனியே வையுங்கள். சீஸ் துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு, மல்லித் தழை, வறுத்த முந்திரி இவற்றைச் சேர்த்து கலந்துவையுங்கள். பிரெட் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, சீஸ் கலவையுடன் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த கலவையை நீளமாக உருட்டி (ரோல் போல செய்யுங்கள்), சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிடுங்கள். நன்றாக வெந்ததும் எடுத்துவிடுங்கள்.

உருட்டிய சீஸ் ரோலை சோள மாவில் புரட்டியெடுத்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்துப் பிறகு தவாவில் போட்டுப் பொரிக்கலாம்.cheese 2803421f

Related posts

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

ஃபுரூட் கேக்

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்

nathan

லசாக்னே

nathan