29.5 C
Chennai
Sunday, May 19, 2024
paneer gravy
Other News

மூலிகை பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பூண்டு – 6 பல் (நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)paneer gravy

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Herb Paneer Gravy Recipe In Tamil
* பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.

Related posts

இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!விஜய் டிவி ரக்சன் ..

nathan

பள்ளி சுற்றுலாவில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

nathan

உலக பணக்கார உக்ரைன் பூனை பிரான்சில் தஞ்சம் -நீங்களே பாருங்க.!

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்த நடிகையா இது..?

nathan

தாய் விபரீதமுடிவு – உருக்கமான கடிதம் சிக்கியது!

nathan

சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையுடன்

nathan

கட்டாயத் திருமணத்தைத் தவிர்க்க வீட்டை விட்டு ஓடிப்போய் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகாரி ஆன சஞ்சு ராணி!

nathan

திருமணத்தன்றே மனைவி மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டு-க்கொன்ற மணமகன்..

nathan