முகப்பரு

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும்.

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்
சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். கரும்புள்ளிகளைப் போக்கலாம் முகப்பருவை நீக்கலாம். கருவளையங்களை போக்கலாம். மற்றும் பல சரும பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த முடியும்.

குறிப்பாக பீட்ரூட்டைக் கொண்டு கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது தான் மிகவும் சிறந்தது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் முக்கிய காரணம். 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த செயலை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம் ஜொலிப்பதை காணலாம்

2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி அதனால் வந்த தழும்புகளும் மறையும். 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸில் சர்க்கரை சேர்த்து கலந்து அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

இப்படி அவ்வப்போது செய்து வந்தால் படிப்பபடியாக கரும்புள்ளிகள் நீங்குவதை காணலாம். இதை வாரத்தில் 3 நாட்கள் செய்து வர வேண்டும். பீட்ரூட் ஜூஸ் உடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சருமம் வறட்சி படிப்படியாக நீங்கும்.201605091156290418 beetroot face pack SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button