35 C
Chennai
Thursday, May 23, 2024
18 1447833348 5 oliveoil
சரும பராமரிப்பு

உங்கள் சமையலறையில் மறைந்துள்ள சில அழகு ரகசியங்கள்!!!

அழகை அதிகரிக்க அழகு நிலையங்களுக்கு ஏறி இறங்குவதற்கு பதிலாக உங்கள் சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் அங்குள்ள பொருட்களைக் கொண்டே உங்கள் அழகை நம்பமுடியாத அளவில் அதிகரிக்கலாம். என்ன புரியவில்லையா? உங்கள் சமையலறையில் உள்ள ஏராளமான பொருட்கள் உங்கள் சரும அழகை அதிகரிக்கும்.

சொல்லப்போனால் கடையில் விற்கப்படும் க்ரீம்களை விட, சமையலறையில் உள்ள பொருட்கள் மிகவும் வேகமாகவும், ஆரோக்கியமான வழியிலும் சரும பிரச்சனைகளைப் போக்கும். இங்கு உங்கள் சமையலறையில் மறைந்துள்ள சில அழகு ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி தான் பாருங்களேன்…

சர்க்கரை

சர்க்கரை மிகவும் சிறப்பான அழகு பராமரிப்புப் பொருள். சர்க்கரையைக் கொண்டு ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் வெளியேறிவிடும். அதிலும் சர்க்கரையை தேன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவினால், சருமத்தின் பொலிவு மேம்படும்.

முட்டை

முட்டை உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறிப்பாக முட்டையில் உள்ள புரோட்டீன் சரும செல்களுக்கு மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ முகம் பளிச்சென்று மாறும். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 15 நிமிடம் கழித்து அலச, தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

தேன்

தேன் சிறந்த கிளின்சர் மற்றும் மாய்ஸ்சுரைசர். அந்த தேனை வெறுமனே அல்லது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை அகலும். மேலும் தேன் முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யும்.

பேக்கிங் சோடா

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா இருந்தால் போதும். அதனைக் கொண்டு முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். 1 சிட்டிகை பேக்கிங் சோடாவுடன், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் மைல்டு ஃபேஸ் வாஷ் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து, முகத்தைக் கழுவ வேண்டும். மேலும் பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்கவும் உதவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சமையலுக்கு மட்டுமின்றி, சருமம் மற்றும் தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தலாம். அதிலும் இதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்து, தலைமுடி உதிர்வது குறையும். தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முகம் பொலிவோடு, பிரகாசமாக மின்னும்.

தக்காளி

தக்காளியை சிறந்த டோனராகப் பயன்படுத்தலாம். தக்காளியைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யும் போது, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள், இறந்த செல்கள் போன்றவை முற்றிலும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

பால்

பால் மிகவும் சிறந்த கிளின்சர் மற்றும் மாய்ஸ்சுரைசர். அந்த பாலில் தேன் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவாகும். குதிகால் வெடிப்பு இருந்தால், பாலை தடவி வர, அதில் உள்ள அமிலம் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்கி, வறண்ட சருமத்தை மென்மையாக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, பாலில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் உள்ள சாபோனின்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை நீக்கும். அதற்கு ஓட்ஸை பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

18 1447833348 5 oliveoil

Related posts

எல்லா வித சருமத்திற்கான பொருத்தமான டிப்ஸ்-உபயோகிச்சு பாருங்க

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா

nathan

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற வேண்டுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

வெயிலால் கருமையா? எண்ணெய் சருமமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை

nathan

சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்

nathan

பெண்களே உங்களுக்கு தெரியுமா மருதாணியில் ஒளிந்திருக்கும் தனித்துவமான ரகசியம்!

nathan

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan