33.3 C
Chennai
Saturday, May 18, 2024
sl4266
சிற்றுண்டி வகைகள்

கார மோதகம்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், முட்டைகோஸ், பேபிகார்ன், குடைமிளகாய்) – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – 3/4 டீஸ்பூன்,
கொழுக்கட்டைமாவு – 1/2 கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய காய்கறிகளை போடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 3-4 நிமிடங்கள் சுருள வதக்கி ஆற விடவும். 1 கப் தண்ணீருடன் ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மாவில் தண்ணீரை வேண்டிய அளவிற்கு சேர்க்கவும். மாவை நன்கு வெண்ணெய் போல் பிசைந்து கொள்ளவும். மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து கையில் எண்ணெய் தடவிக் கொண்டு குழிவாக செய்து காய்கறி கலவையை 1 டீஸ்பூன் வைத்து மோதகம் மாதிரி செய்து மூடவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து மோதகத்தை ஆவியில் 10 நிமிடங்கள் வைத்து சூடாகப் பரிமாறவும்.sl4266

Related posts

மசாலா பூரி

nathan

சுவையான அவல் உப்புமா

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

nathan

பொரி உருண்டை

nathan

குலோப் ஜாம் எளிமையான செய்முறை

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்

nathan

இஞ்சித் தொக்கு

nathan