10 1457591546 6 hibiscus flower
ஹேர் கண்டிஷனர்

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க செம்பருத்திப் பூவைப் பயன்படுத்துவது எப்படி?

அக்காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சமையலறைப் பொருட்களும், மூலிகைகளும், பூக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்படி தலைமுடி பிரச்சனையைப் போக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் செம்பருத்திப் பூ.

செம்பருத்தியின் பூ மட்டுமின்றி, அதன் இலைகளைக் கொண்டும் தலைமுடியைப் பராமரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு செம்பருத்தியை எப்படி தலைக்கு பயன்படுத்துவது என்றும், அதைப் பயன்படுத்துவதால் பெறும் பலன்கள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொடுகுத் தொல்லை குறையும்

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், செம்பருத்தியைப் பயன்படுத்துங்கள். அதிலும் செம்பருத்திக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை தவைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பொடுகால் ஏற்படும் அரிப்பு நீங்கும். அதற்கு தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்திப் பூ, உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் துளசி சேர்த்து கொதிக்க வைத்து, அந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் பொடுகு நீங்கும்.

பொடுகைப் போக்கும் மற்றொரு முறை

செம்பருத்திப் பூ பொடுகைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு அதனை எண்ணெயாகப் பயன்படுத்தாவிட்டாலும், இரவில் படுகுகும் போது நீரில் செரும்பருத்திப் பூவை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை ஸ்கால்ப்பில் தடவி வந்தால், பொடுகு குறையும்.

pH அளவைப் பராமரிக்கும்

செம்பருத்திப் பூ ஸ்கால்ப்பின் pH அளவைப் பராமரித்து, பொடுகினால் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். எனவே உங்களுக்கு உச்சந்தலை அரித்தால், உங்கள் ஸ்கால்ப்பின் pH அளவைப் பராமரிக்க செம்பருத்திப் பூவைக் கொண்டு தலையை பராமரியுங்கள்.

தலைமுடி வளர்ச்சிக்கு…

செரும்பருத்திப் பூ பொடுகைப் போக்குவதில் மட்டுமின்றி, தலைமுடியின் வளர்ச்சிக்கும் உதவும். எனவே உங்களுக்கு நல்ல அடர்த்தியான தலைமுடி வேண்டுமானால், செம்பருத்தி பூ இதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, குளிர வைத்து தலையில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து பின் அலச வேண்டும்.

வலிமையான மற்றும் ஆரோக்கியமான முடி

செரும்பருத்திப் பூவை தயிர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச, தலைமுடி வளர்வதோடு, முடியும் நன்கு வலிமையோடும்,

செம்பருத்தி ஷாம்பு

3:1 என்ற விகிதத்தில் செம்பருத்தி இலைகளையும், பூவையும் எடுத்துக் கொண்டு, 1 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைத்து, பேஸ்ட் செய்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கலந்து, அந்த கலவையை தலைமுடியில் தடவி அலசி வர, முடியில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
10 1457591546 6 hibiscus flower

Related posts

சோப்பு நுரைகளுக்கு பதிலாக உலர் ஷாம்புவை முயற்சிக்கவும்

nathan

கூந்தலுக்கு சிறந்த எண்ணெய் எது?

nathan

சூப்பர் டிப்ஸ்! நரைமுடியை கருமையாக்கும் சில பயன்தரும் டிப்ஸ்…!

nathan

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

கூந்தலுக்கு பழங்களை வைத்து ஹேர் மாஸ்க்

nathan

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

தலை முடி மிருதுவாக

nathan

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு

nathan

இளநரையை தடுக்கும் வீட்டு தயாரிப்பு ஷாம்பு

nathan