30.5 C
Chennai
Friday, May 17, 2024
15 1458024784 9 beautifularms
சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்!

உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? பலருக்கும் கருமையான அக்குள் தர்மசங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட் போன்றவை காரணங்களாகும்.

இவ்வாறு கருப்பாக இருக்கும் அக்குளை ஒரே வாரத்தில் நீக்க முடியும். அதற்கு கீழே உள்ள 3 இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக இந்த 3 வழிகளையும் வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அரிசி ஸ்கரப்

இந்த ஸ்கரப் செய்வதன் மூலம், வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கரப் செய்வதால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விரைவில் வெள்ளையாகும்.

செய்யும் முறை

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அக்குளை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் கலந்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக 4-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நன்மைகள்

அரிசி பவுடர் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அக்குள் வெள்ளையாகும் மற்றும் தேன் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

கடலை மாவு பேக்

இந்த பேக்கை அக்குளில் போடுவதன் மூலம் அக்குள் வேகமாக வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.

செய்யும் முறை

மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை நீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவவும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 1 நிமிடம் மசாஜ் செய்யவும்.

நன்மைகள்

கடலை மாவில் க்ளின்சிங் தன்மை உள்ளது. இது அக்குள் பகுதியை நன்கு சுத்தம் செய்யும். இதில் உள்ள வெள்ளரிக்காய் பொலிவைத் தரும். மேலும் தயிர் பாக்டீரியால் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, அக்குளை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

நேச்சுரல் க்ரீம்

இந்த நேச்சுரல் க்ரீம், சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, அக்குளில் உள்ள சரும செல்களுக்கு ஊட்டமளித்து, அக்குளை மென்மையாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

செய்யும் முறை

1 டேபிள் ஸ்பூன் உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சுரைசர் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவ வேண்டும்.

நன்மைகள் மில்க் க்ரீம்மில்

அத்தியாவசிய நொதிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இது அக்குளில் உள்ள கருமையான படலத்தை நீக்கி, அக்குள் பகுதியை மென்மையாக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.
15 1458024784 9 beautifularms

Related posts

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

nathan

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க…

nathan

வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்!!!

nathan

அழகு தரும் நலங்கு மாவு அருமை

nathan

வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan