கால்கள் பராமரிப்பு

வீட்டிலேயே செய்யக்கூடிய பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப்

பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப்
ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண்.

பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

தேவையானவை :

வெள்ளை சர்க்கரை – அரை கப்
சமையல் சோடா – 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேன்- 1 டீஸ்பூன்
பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் – 2 துளி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும். சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும். தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.
201606030951106848 home made scrub foot SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button