முகப் பராமரிப்பு

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ் tamil beauty tips

பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும்.

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்
மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும்.

கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது. 201606040726175453 Spoil the beauty of the blackheads nose SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button