CQuk09w
சூப் வகைகள்

தேங்காய் பால் சூப்

என்னென்ன தேவை?

சோள மாவு – 2 டீஸ்பூன்,
தேங்காய் பால் – 1 கப்,
பசும்பால்/சாதாரண பால் – 1 கப்,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி – 1 துண்டு (தோல் நீக்கி துருவியது),
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது),
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
எலுமிச்சை பழம் – 1/2,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் பால், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், தேங்காய் பால் மற்றும் சோள மாவு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதித்ததும், அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் ரெடி!!! இதனை பரிமாறும் போது, இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாற வேண்டும்.

CQuk09w

Related posts

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan

சத்தான சுவையான பீட்ரூட் சூப்

nathan

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

காய்கறி சூப்

nathan

வெள்ளரி சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan

நூடுல்ஸ் சூப்

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan