ஆரோக்கிய உணவு

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிtamil recipes

வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சி
தேவையான பொருட்கள் :

வரகரிசி – கால் கப்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – அரை கப்,
மோர் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
மாங்காய், கேரட் – தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் – தேவைக்கு.

செய்முறை:

* கேரட், மாங்காய், ப.மிளகாயை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வரகரிசியை சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.

* மோரை நன்றாக கடைந்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதம் உள்ள ஓமம் போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய், கேரட், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பாதி வேகும் வரை வதக்கிய பின் கடைந்து வைத்துள்ள மோரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் அதில் கலந்து வைத்துள்ள மோர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கஞ்சியாகப் பருகலாம்.

பலன்கள் :

வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.201606091112443908 how to make varagu rice mor kanji SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button