சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கீரை கட்லெட்

கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இப்போது கீரை கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான கீரை கட்லெட்
தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு – 4,
பசலைக் கீரை – 1 கட்டு,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 2 பல்,
சீஸ் (துருவியது) – அரை கப்,
பிரெட் ஸ்லைஸ் – கால் கப்,
பிரெட் தூள் – தேவையான அளவு,
எலுமிச்சம்பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – கால் கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

* உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளுங்கள்.

* இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின் அதில் கீரையை போட்டு தண்ணீர் வற்றும் வரை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* வதக்கிய கீரை ஆறியவுடன் அதை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* இந்த விழுதை, மசித்த கிழங்குடன் சேர்த்து அத்துடன் உதிர்த்த பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, துருவிய சீஸ் சேர்த்து, நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

* ஒரு கிண்ணத்தில் கார்ன்ஃப்ளார் மாவை நீர்க்கக் கரைத்து கொள்ளுங்கள்.

* உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, வேண்டிய வடிவத்தில் கட்லெட் செய்து, கார்ன்ஃபிளார் மாவில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

* தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள கீரை கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கீரை கட்லெட் ரெடி.

* பசலைக் கீரைக்கு பதிலாக, புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றையும் பாதி, பாதி எடுத்து, அரைத்தும் இந்த கட்லெட்டை செய்யலாம்.

குறிப்பு :

கீரையில் இருக்கும் பீட்டா கரோடின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை வயிற்றுக்கு ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்க்கும். தெளிவான கண்பார்வைக்கும் உதவும்.201606111113112413 Tasty nutritious Palak Cutlet SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button