சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் : ​​​

இறால் – அரை கிலோ
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 6
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பூண்டு சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.

Leave a Reply

error: Content is protected !!