மருத்துவ குறிப்பு

இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்

இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.

இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்

நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.

mistakes couple make relationship

பெரும்பாலும், ஒருவரிடம், ஒருவர் எதையும் மறைக்காமல் உண்மையாக இருந்தாலே இல்லறம் என்றும் சிறந்து விளங்கும்.

விட்டுக் கொடுத்து போவது தான் இல்லறத்தை எப்போதும் சிறக்க வைக்கும். ஆனால், இருவரும் விட்டுக் கொடுத்து போக வேண்டும். ஒருவர் மட்டுமே வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது ஆதிக்கம் செலுத்துதல் ஆகும். எந்த ஒரு உறவில் ஒருவரது ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறதோ, அந்த உறவில் மெய் இன்பம் காண்பது அரிது ஆகிவிடும். எனவே, வீண் ஈகோ மற்றும் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

தம்பதி இருவரும் தினமும் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒருவரிடம் ஒருவர் துளியும் மறைக்காமல் கூற வேண்டும். பல சமயங்களில் சந்தேகம் எழுவதே, நீங்கள் செய்யும் வேலை அல்லது காரியங்கள் குறித்து நீங்கள் மறைக்க நினைப்பதால் தான். ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் இருவரில் யாருக்கு காயம் பட்டாலும் இருவரும் வருந்த வேண்டும். யார் ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தாலும், இருவரும் இன்பம் கொள்ள வேண்டும். உன் இன்பதுன்பங்கள் குறித்து நான் வருத்தப்பட முடியாது என்பது இல்லறமே கிடையாது. உணர்வு ரீதியாக தம்பதிகள் சமநிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது படுக்கையறையில் கொஞ்சுதல் முதற்கொண்டு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

உங்கள் துணைக்கு துரோகம் எண்ண நினைக்கும் முன்பு, அதே துரோகத்தை உங்கள் துணை உங்களுக்கு செய்தால் உங்களது மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள் என்ன, நீங்கள் எவ்வளவு வருந்துவீர்கள் என்பது குறித்து நினைவில் கொள்ளங்கள்.

ஒருவேளை ஏதேனும் தவறு செய்திருந்தாலும் கூட ஒப்புக்கொள்ளுங்கள். மன்னிப்பு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அதற்காக தவறுகள் செய்துக் கொண்டே இருக்க கூடாது.201606240916376013 Make a couple mistakes for family life SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button