தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?
தலைமுடி சிகிச்சை

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

தேங்காய் எண்ணெய் தடவினால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரவைக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. ஆனால், தலைமுடியின் ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கத் துணைபுரிகிறது.
தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.
தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பதால், தலையின் மேற்பகுதித் தோல் மற்றும் முடி இரண்டும் உலர்ந்துபோவது தடுக்கப்படும்.
தேங்காய் எண்ணெயை கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில்படும்படி தேய்ப்பது தவறான முறை. தலையின் மேற்பகுதித் தோலில் (Scalp) படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும்.
உலர் சருமம் மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் இரவு படுக்கும்போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்குக் குளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, ஷாம்புக்களைப் பயன்படுத்துவது தவறு. ஷாம்புவில் இருக்கும் வேதிப்பொருட்கள் தேங்காய் எண்ணெயின் பணிகளைத் தடுக்கும். எனவே, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.13438887 1164454760279979 5815559299271081597 n

Related posts

உங்க முடி உடையாம கொட்டாம பளபளன்னு இருக்க நீங்க இத செஞ்சா போதுமாம்…!

nathan

உங்க முடி நீளமா அடர்த்தியா பளபளன்னு கருகருன்னு வளர…

nathan

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

nathan

தலைமுடி வளர சில மருத்துவக்குறிப்புகள்

nathan

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

nathan

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… குறைந்த வயதில் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழ இதான் காரணம்!

nathan

தேன் இருந்தால் முடி உதிர்வை ஈஸியா தடுக்கலாம்!

nathan