ஆரோக்கிய உணவு

பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!

இன்றைய வேகமான உலகத்தில் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாமும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என இந்த வேகத்தில் ஓடுவதில் பல விஷயங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே நம்மில் பலருக்கும் தெரியாமல் போய் விட்டது. அதேப்போல் நவீனமாகி கொண்டிருக்கிறோம் என்ற பெயரில் பணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.

சிக்கனம் என்றாலே கெட்ட வார்த்தையாகி விட்டது பலருக்கும். வீண் பகட்டிற்கு பலரும் பலியாகி உள்ளனர். நன்றாக செலவு செய்து ஆடம்பரமாக இருப்பதையே கௌரவமாக கருதுகின்றனர். சிக்கனமாக இருப்பதை அசிங்கமாக கருதுகின்றனர். ஆனால் சிக்கனமாக இருப்பது வீட்டிற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் நல்லது என்பதை நம்மில் பலரும் மறந்து கொண்டிருக்கிறோம். சிக்கனத்தை பல வழிகளில் செய்யலாம். உதாரணத்திற்கு பெண்களின் சமையலறை. அதற்கு பல விதமான டிப்ஸ்கள் உள்ளது. அவைகளை பின்பற்றினால் பணத்தையும் நேரத்தையும் சேமித்திட முடியும். அவைகளைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

முட்டைகள் நற்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

முட்டையின் நற்பதம் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், ஒரு கப் நீரில் அதை போடுங்கள். நற்பதமான முட்டைகள் தண்ணீரில் மூழ்கி விடும்; பழைய முட்டைகள் தண்ணீரில் மிதக்கும்.

இஞ்சியை ஸ்பூனை கொண்டு தோலுரிக்கவும்

மேடுகளும், சீராக இல்லாமலும் இஞ்சி இருப்பதால் அதன் தோலை உரிப்பது சற்று சவாலாக இருக்கும். அதன் தோலை உரிக்க கத்தி அல்லது தோலுரிக்கும் கருவியை பயன்படுத்தாமல், கரண்டியின் (ஸ்பூன்) உதவியை நாடுங்கள். இஞ்சி தோலின் மீது ஸ்பூனை கொண்டு சொரண்டி எடுத்தால், சுலபமாக அதன் தோல் உரிந்து விடும். இதனால் சேதாரம் குறைவாக ஏற்படும்.

காய்கறிகளின் நற்பதத்தை நீடித்திடுங்கள்

குளிர்சாதன பெட்டியில் காய்கறி வைக்கும் தட்டுக்களின் கீழ் பேப்பர் டவல்களை விரித்து வைக்கவும். அவைகள் அளவுக்கு அதிகமாக ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் காய்கறிகள் வேகமாக கெட்டுப் போகாமல் இருக்கும்.

எலுமிச்சைகளை வீணாக்காதீர்கள்

எலுமிச்சை ஜூஸ் தயார் செய்ய சில துளிகள் மட்டும் போதுமா? அப்படியானால் எலுமிச்சையை பாதியாக வெட்டுவதை தவிர்க்கவும். அப்படி செய்தால் அது வேகமாக காய்ந்து விடும். மாறாக, எலுமிச்சையை துளை போட்டு, தேவையான அளவு மட்டும் பிழிந்து கொள்ளுங்கள்.

கீரைகளை நற்பதத்துடன் வைக்கவும்

ஒரு மாத காலத்திற்கு மூலிகைகளை நற்பதத்துடன் வைத்திருக்க, அவைகளை நன்றாக கழுவிய பிறகு, சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கவும். தேவைப்படும் போது அதனை சுலபமாக நறுக்கிக் கொள்ளலாம். அடுப்பில் வைத்த சில நொடிகளில் பனி நீங்கி இயல்பு நிலைக்கு மாறி விடும்.

மாவில் வண்டுகளை அண்ட விடாதீர்கள

் பிரியாணி இலையை மாவு, பாஸ்தா அல்லது அரிசி வைத்திருக்கும் ஜாடியில் போட்டு வைத்தால் வண்டுகள் அண்டாது.

சீஸை காய விடாதீர்கள்

சீஸை காயாமல் இருக்க வெட்டிய பகுதிகளில் வெண்ணெய்யை வைத்து மூடினால், ஈரப்பதத்தால் அது அடைப்பட்டு கொள்ளும். சீஸை காய விடாமல் வைக்க இது மிகச்சிறந்த வழியாகும்.

காய்கறிகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

முள்ளங்கி, செலரி அல்லது கேரட்கள் கெட்டுப் போய் விட்டால், அவைகளை ஐஸ் நிறைந்த நீர் நிரப்பிய கிண்ணத்தில் நறுக்கிய பச்சை உருளைக்கிழங்குடன் போடுங்கள். உங்கள் கண் முன்னாலேயே காய்கறிகள் மீண்டும் நற்பதத்துடன் மாறும்.

பிஸ்கட்கள்

நமத்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மொறுமொறுவென இருக்கும் பிஸ்கட்களை தனியாக ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். பின் அவைகளை சேர்த்து ஒரே டப்பாவில் போட்டு வைத்தால், பிஸ்கட்களில் உள்ள ஈரப்பதம் அதை நமத்து போக வைக்கும்.

வாழைப்பழம் பழுப்பாகாமல் தடுக்கவும்

வாழைப்பழத்தை உண்ண வேண்டும் என நினைத்தால் மட்டுமே அதனை தாரில் இருந்து பிய்க்கவும். அப்படி இல்லையென்றால், அது மிச்ச பழங்களையும் வேகமாக கெடுத்துவிடும்.

உப்பு இறுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

உப்பு டப்பாவில் அரிசியை போட்டு வைத்தால், உப்பு இறுகாமல் இருக்கும். கட்டிகள் உருவாக காரணமாக இருக்கும் உறைவை அரிசி உறிஞ்சி விடும்.

வெண்ணெய் சுவை மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

வெண்ணெய் மீது ஏதேனும் சலுகை அளிக்கப்பட்டால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் குளிர் சாதன பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். காற்று புகாத டப்பாவில் வெண்ணெய்யை அடைத்து விட்டால், உறைய வைக்கும் போது அதன் சுவை மாறாமல் இருக்கும்.

பால் பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும்

பால் பொருட்களான காட்டேஜ் சீஸ் அல்லது புளிப்பு கிரீம் நீடித்து நிலைக்க, அந்த டப்பாக்களை தலைகீழாக குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தலைகீழாக வைக்கும் போது வெற்றிடம் உருவாகும். இது பாக்டீரியா உருவாகாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

தேனை தெளிவாக வைத்திடவும்

தேன் மட்டும் தான் கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள். அதனால் அது கெட்டியாகி இறுகி போனால், அதனை தூக்கி போடாதீர்கள். மிதமான சூட்டில் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து எடுக்கவும். 30 நொடிகளுக்கு ஒரு முறை வெப்பத்தை அதிகரிக்கவும். இதனால் அது மீண்டும் தெளிவாகி, உருகி விடும்.

பாஸ்தாவில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

சமைத்து வைத்து மீதமான பாஸ்தா இறுகி போவதை தடுக்க, அதனை சீல் செய்யப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைத்திடவும். பரிமாற தயாராகும் போது, பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சில நொடிகளுக்கு போட்டு சூடுபடுத்தவும். இதனால் அதன் ஈரப்பதம் மீண்டும் கிடைக்கும்.

க்ரீமிற்கு பதில்

தயிரை உபயோகியுங்கள் சமைக்க தேவையில்லாத உணவுகளில் க்ரீம்களுக்கு பதில் தயிரை பயன்படுத்துங்கள். ஆனால் சமைக்கும் உணவில் தயிரை சேர்த்தால் அது திரைந்துவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் முழுவதுமாக பாலை பயன்படுத்துங்கள் அல்லது பாதி பால் பாதி தயிரை பயன்படுத்துங்கள்.

அடிப்பிடித்த பால்

பாலை அடுப்பில் வைத்து மறந்து விட்டு, அதனால் அது அடிப்பிடித்து போனால், அதில் கொஞ்சமாக உப்பு போடுங்கள். தீஞ்ச வாடை போய் சுவையாக மாறி விடும் பால்.

கருகிய குழம்பை பாதுகாக்கவும்

குழம்பு கருகி, மீண்டும் செய்ய நேரமில்லாமல் போனால், ஒவ்வொரு கப் குழம்பிலும் ஓர் டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்யை சேர்க்கவும். கருகிய வாடையை இது நீக்கும்.

பழங்களில் இருந்து அதிக ஜூஸ் எடுக்க…

சிட்ரஸ் பழங்களில் இருந்து சாறு எடுப்பதற்கு முன்பு, அவைகளை அடுப்பு மேடையில் வைத்து முன்னும் பின்னுமாக நன்றாக உருட்டவும். இதனால் சாறு எடுக்கும் போது அதிக ஜூஸ் கிடைக்கும்.

பழங்கள் வேகமாக பழுக்க…

ராத்திரியோடு ராத்திரியாக பழங்கள் வேகமாக பழுக்க, அவைகளை ஒரு ஆப்பிள் போட்ட பேப்பர் பையில் போட்டு வைக்கவும். ஆப்பிள் ஈதலின் வாயுவை வெளியிடும். இது மற்ற பழங்களை வேகமாக பழுக்க வைக்கும்.

டப்பா வாடையை போக்குங்கள்

பிளாஸ்டிக் உணவு பைகளில் சிறு துவாரங்கள் இருப்பதால், அவைகளை கழுவிய பிறகும், தொடர்ச்சியாக வாசனைகளை கொண்டிருக்கும். அதனால் அந்த பைக்குள் கசக்கிய கருப்பு வெள்ளை செய்தித்தாளை உள்ளே வைத்திடவும். இது அந்த வாடையை உறிஞ்சி விடும். ஆனால் மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், டப்பாவை கழுவிக் கொள்ளுங்கள்.

நாளான ரொட்டிக்கு

புது வாழ்க்கை நாளான ரொட்டியை கீழே போடுவதற்கு பதில், அவைகளை சிறு துண்டுகளாக்கி குளிர் சாதன பெட்டியின் ஃப்ரீசரில் வைத்திடவும். அதனை பின்னர் டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

ஸ்டெயின்லெஸ்

ஸ்டீலை சுத்தப்படுத்துதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது மதுபானத்தை வைத்து தேய்த்தால், அதில் உள்ள கறைகள் நீங்கும். அதற்கு சிறிதளவு பானத்தை பஞ்சுருண்டையில் நனைத்து, கறை இருக்கும் பகுதிகளில் தேய்க்கவும்.

எரிந்த சட்டியை காத்திட

எரிந்த சட்டியை காத்திட, அதன் மீது பேக்கிங் சோடாவை தூவி, பின் 4-5 டீஸ்பூன் உப்பை தூவுங்கள். பின் போதிய நீரை நிரப்புங்கள். அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் ரப்பர் ஸ்பூனை கொண்டு அதனை சுரண்டி எடுத்தால் எரிந்த கறை நீங்கும்.07 1420630262 23 dishwasher

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button