34.2 C
Chennai
Saturday, May 11, 2024
201607300945446764 Evening snack sweet rava paniyaram SECVPF
இலங்கை சமையல்

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பமான ரவா பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள் :

ரவா – 1கப்
மைதா – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
வாழைப்பழம் – 1
தேங்காய் துருவல் – கால் கப்
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை :

* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.

* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.

* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.201607300945446764 Evening snack sweet rava paniyaram SECVPF

Related posts

ரொட்டியும் தேங்காய் சம்பலும்

nathan

கோழிக்கறி (இலங்கை முறை)

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காரசாரமான மொறுமொறு காராபூந்தி

nathan

மாங்காய் வடை

nathan

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

சூப்பரான வெங்காய பக்கோடா செய்வது எப்படி ??

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு நீங்களும் சுவைத்து பாருங்க !!

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

மைசூர் போண்டா

nathan