29.2 C
Chennai
Tuesday, May 21, 2024
Osteoporosis Stages1
மருத்துவ குறிப்பு

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) மருத்துவர்.M.அரவிந்தன்

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) சம்பந்தமாக சிறிது விளக்கமாகக் கூறுங் கள்? இது எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும். இந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற்
கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது.
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

சாதாரணமாக மாதவிடாய் வருகின்ற பெண்ணொருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாகும். மாதவிடாய் நின்ற பின்னர் (Meno pause) பெண்ணொருவரின் உடலிலுள்ள (Cestrogen) எனப்படுகின்ற பெண்ஹோர்மோன் குறைவடைய நேரிடுவதால் இந்த நோய் ஏற்படு வதற்கான சாத்தியக்கூறு அதி கரிக்கின்றது. இதனைத்தவிர வேறு பல காரணங் களாலும் இந்தநோய் ஏற்படுகின்றது. குறைந்த வயதில் மாதவிடாய்தடைப் படுவோர். சனணித்தொகுதிக் குறைபாடுள்ளோர் (Hypo gonadism) தைரொயிட், நீரிழிவு போன்ற பல ஹோர்மோன் பிரச்சினையுள்ளோர் மற்றும் உணவு சமிபாட்டுத்தொகுதி. ஈரல் தொடர்பான பிரச்சினையுள் ளோர் போன்றோரிலும் இது ஏற் படுகின்றது. ஸ்ரீரொயிட்டு போன்ற பல வகையான மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பயன் படுத்து மொருவருக்கும் இந்த நோய் ஏற் படுவதற்கான அபாயம் அதிக மாகும்.

ஒஸ்ரியோ பொரோஸிஸ் எனப் படும் நோய் வருவதைக்குறைப்பதற்கான வழி முறைகள் உள்ளனவா?

சீன இன மக்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதேபோல் குடும்ப உறுப்பின ரொருவருக்கு இருக்கும் போதிலும் இந்த நோய் வருவதற்கான சாத்தியக் கூறு அதிகமாகும். இந்நோய் வருவதற்கான அபாய முள்ளோர் குறிப்பிட்டளவில் போச ணையான உணவை உள்ளெடுப்பது மிக அவசியமாகும். குறிப்பாக கல்சியமுள்ள மற்றும் விற்றமின் D உள்ள உணவுகளைப் போதியளவில் உண்பது அவசிய மாகும். அதேபோல் பாரத்தைத் துக்கும் உடற்பயிற்சிகள் (Weight bearing exercises) மூலமும் எலும்பு உறுதியடைகிறது. புகைத்தல், அளவுக்கு மிஞ்சிய மதுப்பாவனை என்பன எலும்புதேய்வதை அதிகரிக்கின்றன.

ஒருவருக்கு எலும்புதேயும் நோய் உள்ளதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

இந்த நோய் உள்ளவர்கள் சிறு உயரத்திலிருந்து விழுந்தாலே அவர்களுக்கு எலும்பு உடையும் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. சிலருக்கு முள்ளந்தண்டு எலும்பு அமுக்கமடைந்து (Compressed tracture) உயரம் குறைவடைந்தது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. பொதுவாக ஒஸ்ரியோ பொறோஸிஸ் நோயால் எலும்புகளில் நோஏற்படுவ தில்லை. மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். இளவயதினருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. எனவே வைத்தியரொருவர் இந்த நோய் இருப்பதாகச் சந்தே கிக்குமிடத்து மேலதிக பரிசோதனை களை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்துவது மிகவும் அவசிய மாகும்.

தேவையின் அடிப்படை குருதிப் பரிசோதனைகள் (baseline tests). எலும்புதொடர்பான குருதிப்பரிசோதனைகள் (Bone profile) போன்வற்றை வைத்தியர்கள் மேற்கொள் வார்கள். உடலிலுள்ள Vitamin D யின் அளவையும் தேவையேற்படின் பரிசோதித்துக் கொள்ளவேண்டி யிருக்கும். X a y பரி சோதனை மூலம் எலும்பு தேய்ந்திருப் பதைஅறிந்து கொள்ள முடி யும். DXA Scan எனப்படும் விசேட பரிசோதனை மூலம் ஒஸ்ரியோ பொரோஸிஸ் நோயை மிகவும் துல்லியமாகத் தரம்பிரித்து அறிந்து கொள்ள முடியும்.Osteoporosis%20Stages

ஒஸ்ரியோபொரோஸிஸ் நோயை உறுதிப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு எவ்வாறான சிகிச்சைகள் அவசியம்?
நோயாளியானவர் வைத்திய ஆலோசனைப்படி, போதுமான அளவு கல்சியம் விற்றமின் D உள்ள உணவு களை உள்ளெடுத்தல் வேண்டும். பால் மற்றும் அதனோடு தொடர்பான உணவுகள் இதற்கு சிறந்த உதாரண மாகும். வைத்தியரின் பரிந்துரையின் பேரில் தேவையான அளவில் கல்சி யம் மற்றும் விற்றமின் D மருந்து களை உள்ளெடுத்தல் அவசிய மாகும்.

அதைவிட Alendromate எனப்படுகின்ற குளிசையானது வாரத்துக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றது. இதனை உள் ளெடுக்கும்போது வெறும் வயிற்றில் ஒரு குவளை நீருடன் எடுக்க வேண்டும். அதன் பின்னர் அரைமணி நேரத்துக்கு உணவோ தேநீரோ அருந்தாமல் உட்கார்ந்த அல்லது நின்ற நிலையிலே இருத்தல் வேண்டும் இல்லாவிடில்உணவுக் கால்வாய்த் தொகுதியில் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மருந்தை உள்ளெடுக்கும் முறை மற்றும் பக்க விளைவுகள் பற்றி வைத்தியர்களிட மிருந்து விவரமாக அறிந்து கொள்ள முடியும். இதேபோல வருடத்துக்கொரு முறை ஊசி மூலம் ஏற்றப்படும் Zolendronic Aud என்ற மருந்தும் எமது நாட்டில் கிடைக்கப் பெறுகின்றது.

வயிற்றுப் புண் (அல்ல) போன்ற நோயுள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ஏற்றப்படும் இந்த மருந்தை
பயன்படுத்திக் கொள்ளலாம். குளிசை மருந்துகள் பொதுவாக 5 வருடத்திற்கும் ஊசி மருந்தானது பொதுவாக 3 வருடத்துக்கும் வழங்கப்படுகின்றது. வைத்திய ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை DXA Scan பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமாகும்.

மருத்துவர்.M.அரவிந்தன்
அகஞ்சுரக்கும், தொகுதியியல் (ஹோர்மோன்), சிறப்பு வைத்திய நிபுணர்,

Related posts

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

nathan

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…

nathan

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்!

nathan

கம்பங்களி செய்வது எப்படி? சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு டெங்கு காய்ச்சலா? அப்படின்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க…

nathan

பெண்களின் மார்பகத்தில் பூப்படைவு முதல் தாய்ப்பால் அளிக்கும் வரை நிகழும் மாற்றங்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்கள் குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமா?

nathan

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாதா?தெரிஞ்சிக்கங்க…

nathan