மருத்துவ குறிப்பு

தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம். சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல ஏற்படும். சில நிமிடங்களில் சரியாகிவிடும் இதற்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்கலில் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

இன்னும் சிலருக்கு தலை சுற்றும். காது அடைக்கும். இதயம் படபடவென அடைத்துக் கொள்ளும். பேச்சு திடீரென குளறும். இதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.

அல்லது காதுகளில் உண்டாகும் சம நிலையற்ற நிலையில் இவ்வாறு உண்டாகலாம். இன்னும் தீவிரமான நிலை என்னவென்றால் தலை சுற்றி சுய நினைவு இழப்பது. திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை இது. சிறிது உப்பு கலந்த நீர் குடித்தால் எழுந்து கொள்வார்கள்.

மிகவும் பாரமானதை தூக்கும்போது, அல்லது கீழே உட்கார்ந்திருந்து மேலே எழும்போது தலை சுற்றல் உண்டாகும். இதற்கு ரத்த சோகையும் ஒரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் உண்டாகும். இதனால் கூட தலை சுற்றல் உண்டாகும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தலை சுற்றல் ஏற்படும்.

உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகும். தேவையான அளவு நீர் குடிக்கிறீர்களா என தெரிந்து கொள்ளுங்கள். சீரற்ற இதய துடிப்பு இருந்தால், ரத்தம் மூளைக்கு செல்வதில் பாதிப்பு உண்டாகும். உடனே தலை சுற்றல் உண்டாகும். வாய்வினாலும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வினால் வயிறில் அழுத்தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலிருக்கும்.

இப்படி தலை சுற்றலுக்கு பல காரணங்கள் உண்டு. எப்போதாவது வந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் அடிக்கடி வந்தால் தவறாமல் மருத்துவரை நாடி பரிசோதித்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
201608121213266674 Symptoms of the disease indicate dizziness SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button