சரும பராமரிப்பு

சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்

வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும்.

சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்
உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.

வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும். இறந்த செல்களை அகற்றும். வியர்வை, தூசினால் உண்டாகும் அழுக்குகளை களையும். அதனை வைத்து செய்யப்படும் இந்த குளியல் ஸ்க்ரப் தொய்வான சருமத்தை இருக்கி, இளமையாக காண்பிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெரி – 3
தேன் – 1 ஸ்பூன்
காபி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

ஸ்ட்ராபெரி ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. சருமத்தை மெருகூட்டும். தேன் சுருக்கங்களை அகற்றும் மென்மையான சருமத்தை தரும். ஸ்ட்ராபெரியின் விதையை நீக்கி மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேன் மற்றும் காபிப் பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் இந்த கலவையை தேய்த்து, குறிப்பாக கடினமான பகுதிகளில் அழுத்தி தேய்த்து, குளிக்கவும்.

இது இளமையான சருமத்தை தரும் அற்புதமான ஸ்க்ரப் ஆகும். நேரம் இருப்பவர்கள் தினமும் இதனை தேய்த்து குளிக்கலாம். இல்லையென்றாலும் வாரம் 3 நாட்கள் இப்படி செய்தால் நல்ல பலன் தரும். 201609131203139822 Go wrinkles coffee powder Scrub SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button