27.8 C
Chennai
Saturday, May 18, 2024
201609130926160234 Neck
மருத்துவ குறிப்பு

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி

அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை பார்க்கலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி
உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம்.

பயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டிவிடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தைச் சரிசெய்யும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 2: இரு கைகளையும் கோத்து, கட்டை விரல்களை தாடையின் அடியில்வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோத்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

பயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத்தன்மை அதிகரிக்கும்.

உணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கை விரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்.201609130926160234 Neck

Related posts

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

மார்பக புற்றுநோய்

nathan

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan

வேலை தோடும் பெண்களுக்கான சுய பரிசோதனை

nathan

அவசியம் படிக்க..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலை புழுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா?

nathan

வெயில் காலத்தில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை!தெரிந்துகொள்வோமா?

nathan

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் மார்பக வலிகள்

nathan