201609170758568412 Wind Relieving Pose SECVPF
உடல் பயிற்சி

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்

நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்
செய்முறை :

விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இது ஆரம்பநிலை.

சுவாசத்தை உள்ளிழுத்து கைவிரல்களைப் பூட்டி வலது காலை சற்று மடக்கி முழங்கால் மூட்டுக்குக் கீழே பிடிக்கவும். பின்பு வலது முழங்காலை மடக்கி, தொடைப்பகுதியை நெஞ்சை நோக்கி இழுக்கவும். இடது கால் தரையில் நேராக இருத்தல் அவசியம்.

சுவாசத்தை உள்ளடக்கி தலை மற்றும் தோள்பட்டையை உயர்த்தி நெற்றியால் முழங்காலைத் தொட முயற்சிக்கவும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் இதில் நிற்கவும்.

சுவாசத்தை வெளியேற்றி உடலைத் தளர்த்தி ஆரம்பநிலைக்கு வரவும். இதே போல இடதுபுறமும் செய்யவும். இரு கால்களையும் ஒன்றாக மடக்கி நெற்றியால் தொடுதல் பவன முக்தாசனம் ஆகும். 3-5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

பயன்கள்…

முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. வயிற்றுப்பகுதி நன்கு அழுத்தப்பட்டு மசாஜ் செய்யப்படுவதனால் வயிற்றில் உள்ள வாயு வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் இதற்கு பவன(வாயு) முக்த (வெளியேற்றல்) ஆசனம் என்று பெயர். நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு!201609170758568412 Wind Relieving Pose SECVPF

Related posts

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்

nathan

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது -தெரிஞ்சிக்கங்க…

nathan

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

nathan

சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தரும் பேலன்ஸ் ரீச் பயிற்சி

nathan

நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இடுப்பு, தொடை பகுதி சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்

nathan

உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா?

nathan

முதுகுவலிக்கு நிவாரணம் தரும் அர்த்த சக்ராசனம்

nathan

தோள்பட்டையை அழகாக்கும் டிபி ஃப்ளை பயிற்சி

nathan