சிற்றுண்டி வகைகள்

நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?

நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம்.

இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம்.

செய் முறை : முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசையுங்கள்.

பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக அடித்து பிசைந்து, மாவை ஒரு பக்கம் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள்.

பின்பு கொதிக்கும் நீரில் வெல்லம் கலந்து கரையும் வரையில் ஒரு கொதி விடுங்கள்.

கல், மண் களைய அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்ல நீரை ஊற்றி கெட்டியாகும் பதம் வரை கொதிக்க விடுங்கள்.

லேசாக கெட்டிபதத்தில் வரும்போது தேங்காய் துறுவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். ஒன்றாக சேர்ந்து பூரணம் ஆகும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். அதன் பிறகு சில நிமிடம் ஆறவிடுங்கள்.

இப்போது மாவினை ஒரு உருண்டை அளவு எடுத்து அதனை சப்பாத்தி போல் சிறிய அளவில் தேய்க்கவும். இதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்க்கவும். ஒட்டாமலிருக்க நெய்யை தடவிக் கொள்ளுங்கள்.

புதிதாக செய்பவர்களுக்கு கைகளால் செய்ய வரவில்லையென்றால், சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும்.

நாசூக்காகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும். இல்லையெனில் பூரணம் வெளியே வந்துவிடும். பின்னர் தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் நெய்யில் சுட்டு எடுக்கவும்.

24 1474704948 cook

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button