28.4 C
Chennai
Thursday, May 16, 2024
pragnent
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஏன்?

கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Impalantation), கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம். இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம்.
இவை தவிர, கர்ப்பப்பை வாயில் தோன்றும் சிறு கட்டிகள் (polyps) மற்றும் பெண் உறுப்பில் காயம் அல்லது வெட்டு காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம். கருவுற்ற இரு வாரங்களுக்குள் சிலருக்கு லேசான ரத்தக்கசிவு இருக்கும். சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஏற்படலாம்.

இந்த காலகட்டத்தில் பலரும் கரு சிதைந்துவிட்டதாகப் பதறிப் போய் வருவார்கள். சில பெண்கள் இதை மாதவிலக்கு என்று தவறாக நினைத்து, தான் கர்ப்பமானதையே உணராமல் இருப்பதும் உண்டு. கர்ப்பகாலத்தில், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். எனவே, அந்தப் பகுதி மிக மிருதுவாகவும் ரத்தம் கோத்தது போலவும் இருக்கும். அந்தப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது (உதாரணமாக: உடல் உறவு அல்லது மருத்துவப் பரிசோதனை) சிறிதளவு ரத்தக்கசிவு ஏற்படலாம்.

இதுபற்றி பயப்படத் தேவை இல்லை. இது இயற்கையாகவே நின்றுவிடும். கருவுற்ற தொடக்கத்தில் இருந்தே ரத்தக்கசிவு இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அந்தக் கர்ப்பம் அப்படியே தொடர்ந்துவிடும். ஆனால், மாதவிலக்கு நாட்களைவிட அதிகமான ரத்தப்பெருக்கு, அடிவயிற்றில் சுருட்டிப் பிடிக்கும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, மயக்கம் மற்றும் தலைசுற்றல், ரத்தப்போக்குடன் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். டாக்டர் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பார்”.pragnent

Related posts

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

nathan

கோடை காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்

nathan

பிறந்த குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தாய்ப்பால்

nathan

35-வது வாரத்தில் குழந்தை பிரசவிப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

nathan

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?

nathan

கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் நல்லதா?

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்

nathan

கர்ப்பிணிகள் 7 மாதங்களுக்கு பிறகு செய்யக்கூடாதவை

nathan