இளமையாக இருக்க

வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்

சருமம் வயதான பின்னும் இளமையாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்
அரிசி நீர் :

பெண்கள் அரிசியை 2 கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் சருமம் இறுக்கமடையும். கன்னங்கள் பூசியது போல காணப்படும். இது சருமத்திற்கு பளபளப்பையும் தரும்.

பச்சைப் பயிறு :

பெண்கள் பச்சைப்பயிறு பேஸ்ட் செய்து பூசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தினமும் பச்சைப் பயிறை பொடி செய்து அதனை மாஸ்க் போல முகத்தில் போட்டு வந்தால் சருமத்தை என்றும் இளமையோடு வைத்து கொள்ளலாம்.

கிரீன் டீ :

பெண்கள் தினமும் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். அது சருமத்தில் ஏற்படும் சின்ன சின்ன சுருக்கங்களையும் போக்குவதால் அதனை நாள்தோறும் குடிக்க வேண்டும். கிரீன் டீ குடித்து வந்தால் வயதானாலும் சருமம் இளமையாகவே இருக்கும்.

மசாஜ் :

பெண்கள் ஆயில் மசாஜ் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்வு தரும்.

புதினா இலை :

புதினா இலையை பேஸ்ட் செய்து அதனை முகத்தில் மாஸ்க் போல் போட்டு கொள்ள வேண்டும். காரணம் அவை சருமத்தில் இறந்த செல்களை அகற்றி, இளமையாக வைக்கிறது.

மஞ்சள் :

மஞ்சளை அதிகமாய் உணவிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அழகிற்கும் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் கலந்த கிரீம்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயற்கையான அழகு தரும் பொருட்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.201610270715476796 natural ways to stay young SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button