மருத்துவ குறிப்பு

உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!!!

உங்களுக்கு வலுவில்லா கோர் தசை உள்ளதா? அல்லது உங்கள் தினசரி வேலைகளின் போது ஒவ்வொரு முறையும் உங்கள் கீழ் முதுகு வலிக்கின்றதா என்ற கேள்வி சரியானதாக இருக்கும். இது பலவீனத்தின் அறிகுறியாகும்.

இங்கு வலுவில்லா கோர் தசை குறித்த சில அடிப்படைகள் மற்றும் கட்டுக் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வலுவில்லா கோர் தசை என்பது என்ன? கோர் தசைகள் பிரபலமான சிக்ஸ் பேக் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. கோர் தசையானது சிக்ஸ் பேக் என்றழைக்கப்படும் உடலின் முன் பகுதியில் உள்ள தசைகளை மட்டுமல்லாது கீழ் முதுகு மற்றும் ஆப்லிக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த தசைகள் பலவீனமாக இருந்தால், அது வலுவற்ற கோர் தசை என்றழைக்கப்படுகிறது.

வலுவற்ற கோர் தசையின் அறிகுறிகள் என்ன? * தசை பவீனமாக இருந்தால், சரியான நிலையில் நீண்ட நேரம் உட்காரவோ, நிற்கவோ முடியாது.

* கோர் தசை வலிமையின்றி இருந்தால், இடுப்பு பகுதியின் நிலையை மாற்றச் செய்கிறது மற்றும் உங்கள் முதுகுத் தண்டில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் கீழ் முதுகை வளையச் செய்கின்றது. கீழ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கேள்விப்பட்டதாக இருக்கும்.

கோர் தசை உருவாவதற்கு அவசியம் என்ன? உங்கள் கோர் தசைகள் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தால் தான், நீங்கள் சிறப்பாகவும், திறம்படவும் செயல்படவும் முடியும். அதற்காக ஒருவர் சிக்ஸ் பேக் வைத்திருந்தால், அவரது கோர் தசை வலுவாக இருக்கும் என்பதில்லை. சிக்ஸ் பேக் என்பது கொழுப்பு குறைந்த உடலுக்கு அடையாளமே தவிர வலுவான தசைக்கு இல்லை.

ஒருவர் எத்தனை முறை கோர் தசை கொண்டு வேலை செய்கின்றார்? அர்னவ் அமைத்த சில நடைமுறை வழிமுறைகளின் படி "உங்கள் கோர் தசை ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றது. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜிம்மில் கோர் பயிற்சிகள் செய்கிறீர்கள் என்பது இதன் அர்த்தமாகாது. நாம் ஜிம்மிற்கு வெளியேயும் கோர் தசைகளை பயன்படுத்தி சில வேலைகளைச் செய்கிறோம். எனவே நீங்கள் நடக்கும் போது மற்றும் உட்காரும் போதும் சரியான நிலையில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்".

வலுவில்லா கோர் தசையை வலுப்படுத்துவதற்கான அர்னவ்வின் குறிப்புகள்
– கணினியின் முன் பல மணி நேரங்கள் கூன் போட்ட நிலையில் நாம் உட்கார்ந்திருப்பது வலுவில்லா தசைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். எனவே நேராக உட்காருங்கள்.

– நீங்கள் நிற்கும் போது உங்கள் வயிறு இணைந்திருக்காதவாறு உயரமாக நிற்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கோர் தசைகளை வலுப்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் * நீங்கள் உங்கள் அலுவலக மேஜையில் அமரும் போது அழுத்தமாக உணராமல் நன்றாக உணர்வீர்கள்.

* கீழ் முதுகு வலித்தல் போன்ற பாதிப்புகள் குறையும். வலுவான கோர் உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை ஒழுங்குபடுத்தும்.

கோர் தசைகளை வலுப்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் * வலுவான கோர் தசை உடல் உறுதிப்பாட்டை அதிகரிக்கின்றது. மேலும் விழுவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றது.

* பொருள்களை தூக்குதல் மற்றும் மாற்றுதல், நிற்றல், உட்காருதல் போன்றவை ஒரு பெரிய பணியாக தோன்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் குனிந்து நிமிரும் போதும் ஆஆ.. என்று சொல்வதை தானாகவே நிறுத்தி விடுவீர்கள்.

வலுவற்ற கோர் எவ்வாறு உங்கள் உடலை பாதிக்கின்றது? வலுவற்ற கோர் தசைகள், உங்கள் இடுப்பு பகுதியில் ஒழுங்கின்மையையும், முழங்கால் மற்றும் மூட்டு பகுதிகளில் ஸ்திரத்தன்மை இழக்கவும் செய்கின்றது. இந்த பலவீனம் அதிக அளவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றது. மேலும் பக்கவாட்டு இயக்கத்தை நிறுத்தி பலவீனம் ஆக்குகின்றது

29 1438146920 3 six pack

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button