201612091109374394 murungai keerai vadai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி

முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி வடை போல் செய்து கொடுக்கலாம்.

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – கால் கப்
உளுந்து – அரை கப்
ஆய்ந்த முருங்கை இலை – 1 கைப்பிடி
எள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

* இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். 201612091109374394 murungai keerai vadai SECVPF

Related posts

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

nathan

சுவையான தக்காளி பஜ்ஜி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

காய்கறி காளான் பீட்சா

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

சூப்பரான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan