சரும பராமரிப்பு

அழகைப் பராமரிக்க தோல் மருத்துவர்கள் கூறும் சில அழகு குறிப்புகள்!

சருமத்தில் திடீரென்று வித்தியாசமான பிரச்சனைகள் ஏற்பட்டால் முதலில் நாம் ஒரு நல்ல தோல் மருத்துவரை சந்தித்து, அவரது ஆலோசனையைப் பெறுவோம். சருமத்தில் அடிக்கடி ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும், ஆரம்பத்திலேயே தோல் மருத்துவரை சந்தித்து காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற் போல் நடந்தால், பிரச்சனைகள் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

ஆனால் இன்றைய காலத்தில் சரும பிரச்சனைகள் வந்தால், அதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவதால், சரும ஆரோக்கியம் மெதுவாக நம்மை அறியாமலேயே அழிந்து வருகிறது.

அழகைக் கெடுக்கும் வகையில் சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க, தோல் நிபுணர்கள் கூறும் சில அழகு குறிப்புக்களை தமிழ் போல்ட்ஸ்கை இங்கு கொடுத்துள்ளது.

ஃபேஷியல் மசாஜ் முகத்தில் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி தான் விரைவில் சுருக்கங்கள் வரும். இதனைத் தவிர்க்க தினமும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் ஒரு எண்ணெய் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீர்ச்சத்து சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர்ச்சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, சருமத்தின் வெளிப்பகுதி வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர், லோசன் போன்றவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சுடுநீர் குளியல் பெரும்பாலான தோல் நிபுணர்கள் மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர். சுடுநீரில் குளிப்பதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேறி, சரும வறட்சி அதிகரிக்கும். வேண்டுமானால் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

சன் ஸ்க்ரீன் தோல் மருத்துவர்கள் தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் சருமம் கருமையடைவது தடுக்கப்பதோடு, தோல் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும்.

கண் விளிம்பு கண் விளிம்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு வெளியே வெயிலில் செல்லும் போது, சன் க்ளாஸ் அணிந்து செல்வதோடு, கண்களை கடுமையாக தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களை அதிகமாக தேய்த்தால், அதனால் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதடுகள் சருமத்திற்கு அடுத்தப்படியாக உதடுகள் தான் அதிகம் வறட்சியடையும். உதடுகள் வறட்சியுடன் இருந்தால், அது தோற்றத்தை அசிங்கமாக வெளிக்காட்டும். எனவே தினமும் உதட்டிற்கு லிப் பாம் அல்லது தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.

உணவை கவனியுங்கள் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஸ்டார்ச் உணவுகள், எண்ணெய் பசை உணவுகளைத் தவிர்த்து, ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

03 1470206707 1 massage

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button