தலைமுடி அலங்காரம்

சுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா? இந்த ஸ்ப்ரேக்களை உபயோகிங்க!!

2 அடி கூந்தலை வைத்துக் கொண்டு எல்லாரும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் எளிதில் உபயோகிக்கும் ஷாம்பு கூட இல்லாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு எப்படி கூந்தலை பராமரித்தார்கள்.

நாம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற வேண்டுமென கூந்தலின் தன்மையை கெடுத்துவிடுகிறோம். ஷாம்புக்களினாலும், கெமிக்கல் ஹேர் ஸ்ப்ரேக்களாலும் கூந்தல் வறட்சியை அடைந்து சிக்கலைகிறது. ஜீவனில்லாமல் ஏனோ தானோவென்றாகிவிடுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண் நீங்களே இயற்கையான முறையில் ஸ்ப்ரே வை தயாரிக்கலாம். இவை கூந்தலுக்கு கெடுதல் தராது. ஊட்டம் அளித்து, வெளிப்புற மாசுக்களிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்கும். கூந்தலின் பிரச்சனைகளுக்கு ஏற்ப, அவற்றை எப்படி செய்வது என பார்க்கலாம்.

கூந்தல் அரிப்பிற்கான ஸ்ப்ரே : இந்த சீரத்தில் நிறைய விட்டமின், தொற்று எதிர்ப்பு பொருட்கள், பாக்டீரியா எதிர்ப்பு திறன் ஆகியவை அமைந்துள்ளன.

தேவையானவை : தேயிலை மர எண்ணெய் – 2- 3 துளிகள் கற்றாழை சதைப் பகுதி – 2 டேபிள் ஸ்பூன் ஜுஜுபா எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குலுக்கவும். இதனை உங்கள் ஸ்கால்ப் முழுவதும் ஸ்ப்ரே செய்து 1 நிமிடம் மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் தலை வாரிக்கொள்ளலாம்.

வறண்ட கூந்தலுக்கான ஸ்ப்ரே : தேன் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் – சில துளிகள்

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். அவ்வப்போது இதனை ஸ்ப்ரே செய்து சில நொடிகள் மசாஜ் செய்தால் போதுமானது. மென்மையான கூந்தல் கிடைக்கும்.

உடனடி அடர்த்தி கிடைக்க : உங்களுக்கு கூந்தல் அடர்த்தியில்லாமல் மெலிதாக இருக்கிறதா? ஏதாவது விசேஷத்திற்கு செல்லும்போது என்ன செய்தாலும் சுமாராய் இருக்கும். இந்த சமயத்தில் இந்த ஸ்ப்ரே வை உபயோகியுங்கள். கூந்தல் அடர்த்தியாய் தெரியும்.

தேவையானவை : டிஸ்டில்டு வாட்டர் – 1 கப் பாதாம் அல்லது ஏதாவது வாசனை எண்ணெய் – சில துளிகள்

இரண்டையும் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஸ்ப்ரே செய்து கொண்டு காய வைத்தால் முடி அடர்த்தியாக தெரியும்.

hair 17 1471410972

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button