சட்னி வகைகள்

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி

வயிறு கோளாறு உள்ளவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி
தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் – கால் கிலோ,
காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப),
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி – 3,
சின்ன வெங்காயம் – 10,
உளுந்தம்பருப்பு – – 2 டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முட்டைகோஸ், சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பை போட்டு அது பொன்னிறம் ஆனதும் அடுத்து அதில் வெங்காயம், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.

* முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்… புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத்தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்).

* வதக்கியவற்றை அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

* சூப்பரான முட்டைகோஸ் சட்னி ரெடி.

* இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.201612220917049004 Cabbage chutney SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button