30.3 C
Chennai
Sunday, May 19, 2024
H9rbn3a
இனிப்பு வகைகள்

மினி பாதாம் பர்பி

என்னென்ன தேவை?

பாதாம்பருப்பு – 100 கிராம்,
சர்க்கரை – 125 கிராம்,
உப்பு – ஒரு சிட்டிகை,
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்,
அலங்கரிக்க – சில்வர்தாள் (மிட்டாய் கடையில் ஒட்டுவதுபோல் கடைகளில்கிடைக்கும்),
நெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாதாமை ஊற வைத்து ½ கப் பாலுடன் அரைத்தும் செய்யலாம். இப்போது கடைகளில் தோல் எடுத்த பாதாம் கிடைக்கிறது. அதை பயன்படுத்தியும் செய்யலாம். அது கிடைக்காவிட்டால் பாதாமை ½ மணி நேரம் சூடான தண்ணீரில் ஊற விட்டு தோல் எடுத்து உலர்த்தி பின் மிதமான சூட்டில் வறுத்தால் கரகரப்பாக வரும். ஆறியதும் அதனை மிக்சியில் போட்டு, விட்டு விட்டு அரைத்தால் நன்றாக பவுடர் போல் ஆகிவிடும். பின் தேவையான தண்ணீர் விட்டு ¼ கப் சர்க்கரை போட்டு கரைந்ததும், ரோஸ் எசன்ஸ் சேர்த்து இந்த பாதாம் தூள் போட்டு கைவிடாமல் கிளறவும்.

சுவை கூட ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். சுருளும்போது கிளறி இறக்கி மீண்டும் 2 நிமிடம் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் படுத்தி சில்வர் தாள் ஒட்டி 1 மணி நேரம் அப்படியே ஆறவிடவும். பின் விருப்பமான வடிவில் சிறு சிறு துண்டுகள் போடவும். பாதாம் அதிக விலை என்பதால் மினி பாதாம் பர்பி செய்து படைத்து பரிமாறலாம்.

குறிப்பு: இந்த பாதாம் விழுதை கிளறும்போது சர்க்கரை பதம் தேவை இல்லை. சுருண்டதும் இறக்கி கிளறி ஊற்றவும். அதன் மேல் சில்வர் தாள் ஒட்டவும்.H9rbn3a

Related posts

பைனாப்பிள் – தினை கேசரி

nathan

ரவா லட்டு

nathan

சுவையான வாழைப்பழ அல்வா

nathan

ஆப்பிள் அல்வா

nathan

சுவையான பாதாம் லட்டு

nathan

ரவா கேசரி எப்படி செய்வது?

nathan

தேங்காய் பர்பி

nathan

சூப்பரான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

nathan

பூந்தி செய்வது எப்படி ??? tamil cooking

nathan