32.5 C
Chennai
Sunday, May 19, 2024
hqdefault
சிற்றுண்டி வகைகள்

கேரட் தோசை

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1/2 கப்,
இட்லி அரிசி – 1/2 கப்,
துருவிய கேரட் – 3/4 கப்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 6,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இத்துடன் கேரட், சீரகம், மிளகு, காய்ந்தமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் மாவை லேசான தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வைத்து சுடவும். ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
hqdefault

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா

nathan

மைசூர் பாக்

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

சத்தான புதினா – கேழ்வரகு தோசை

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

ஷாஹி துக்ரா

nathan