ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க

வெள்ளரிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க
வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்கலைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.201701111437089297 Daily eat cucumber SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button