28.6 C
Chennai
Saturday, May 18, 2024
201701171346416651 pimples main reasons SECVPF
முகப் பராமரிப்பு

முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்

முகப்பருக்கள் கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன. அவை என்ன காரணங்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

முகப்பரு வருவதற்கான முக்கிய காரணங்கள்
முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்சனை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.

அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். மேலும், ஜீன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள், ஒரு சிலரின் முகத்துக்குத் தனி அழகைத் தருவதும் உண்டு.

காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். பொடுகுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.

பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.

நீண்ட நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மேலும், அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone) முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.

அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பெற, தினமும் முகத்துக்கு பயத்தமாவு, மஞ்சள் கலந்து பூசலாம்.

சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்கிரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.201701171346416651 pimples main reasons SECVPF

Related posts

தேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா..? அப்ப இத படிங்க!

nathan

ஏழே நாட்களில் முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாகப் போக்க வேண்டுமா?

nathan

முகத்துக்கு அழகு புருவம்

nathan

முகத்தில் கரும்புள்ளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும வறட்சிக்கு இயற்கையோடு கூடிய நிவாரணம் ……

sangika

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

உங்களுக்கு இந்த பரு போகணுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

முகப்பொலிவுப் பெற இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan