29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
sl4480 1
சிற்றுண்டி வகைகள்

சுக்கா பேல்

என்னென்ன தேவை?

அரிசிப் பொரி – 2 கப்,
வேக வைத்து பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு – 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/4 கப்,
பொட்டுக் கடலை – 2 டீஸ்பூன்,
உப்புக் கடலை – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய மாங்காய் – 1/2 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள்- 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கேற்ப,
நைலான் சேவ் / ஓமப்பொடி – 1/4 கப்,
பூரி (பானிபூரி) உடைத்தது – 3 முதல் 4.

பச்சைச் சட்னி தயாரிக்க…

புதினா – 1/2 கப்,
கொத்தமல்லித் தழை – 1/4 கப்,
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்,
சிறிய பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் – 1 சிட்டிகை,
பெருங்காய தூள் – 1 சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பச்சைச் சட்னி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு உலர்ந்த பாத்திரத்தில் சுக்கா பேல் செய்ய கொடுத்துள்ள பொருட்களையும், தண்ணீர் விடாமல் அரைத்த பச்சைச் சட்னியையும் கலந்து, உடைத்த பூரி மற்றும் சேவ் அல்லது ஓமப்பொடி சேர்த்து கலந்து உடனே பரிமாறவும்.sl4480

Related posts

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan

வெஜிடேபிள் அவல் கட்லெட்

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

கேரட் தோசை

nathan

தாளித்த கொழுக்கட்டை

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

பிடி கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

nathan