32.5 C
Chennai
Sunday, May 19, 2024
201702061527344142 kerala special Meen Moilee SECVPF
அசைவ வகைகள்

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி
தேவையான பொருட்கள் :

வாவல் மீன்/கிங்பிஷ் – 250 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய – 2
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

* தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

* குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகள், தக்காளியை சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி கிளறி, இறக்கவும்.

* சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!

* இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பு :

இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். தக்காளி துண்டுகளாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.201702061527344142 kerala special Meen Moilee SECVPF

Related posts

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan

இறால் பஜ்ஜி

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல்

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

nathan

வறுத்தரைச்ச மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan