உடல் பயிற்சி

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியம் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் உடற்பயிற்சியை செயல்படுத்துவது முக்கியம். ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது.

கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.

1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. மிதிவண்டி ஒட்டுதல்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் உயிர்வளிவேண்டுகிற (aerobic) என்று அழைக்கப்படும். உயிர்வளிவேண்டுகிற என்றால் பிராணவாயு உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான பிராணவாயு தேவையோ அதனை உயிர்வளிவேண்டுகிற உடற்பயிற்சி என்கிறோம். எனவே நமக்கு அதிக பிராணவாயு கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும்.

சீராகவும் முறையாகவும். தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் செரிமானிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.

இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள் :

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்

2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்

3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்

4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்

5. தோற்றப் பொலிவு கூடும்

6. உடல் பலம் கூடும்

7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள பலன்களை பெற நாம் இப்பொழுதே உடற்பயிற்சி திட்டத்தினை வகுப்பதோடு இல்லாமல், இப்போதே செயல்படுத்துவோம். உடற்பயிற்சி செய்வது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் சரியான உடல் எடையைக் காத்துக்கொள்ளவும் உதவும். டிவி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று ஒரு நிபுணர் சொல்கிறார்.gfhgfjgfjf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button