இளமையாக இருக்க

நீங்கள் படுக்கும் முறையும் வயதான தோற்றத்திற்கு காரணமாகிவிடும் என்பது தெரியுமா?

நீங்கள் சுவாசிப்பது போலவே உங்கள் சருமமும் சுவாசிக்கிறது. அவற்றில் மேக்கப், க்ரீம் அகிய்வற்றை தடவி சரும செல்களை நீங்கள் சுவாசிக்க விடாமல் செய்யும்போது செல் இறப்பு வேகமாகிறது. இதனால் விரைவில் சுருக்கங்கள் உண்டாகும்.

உங்கள் சருமம் என்றும் இளமையாகவும் சுருக்கமில்லாமலும் இருக்க வேண்டுமென்றால் தினமும் தூங்குவதற்க்கு முன் இந்த விஷயங்களை கட்டாயம் செய்தாக வேண்டும். என்னவென்று பார்க்கலாம்.

உங்கள் முகத்தை கழுவினீர்களா? அன்றைய நாள் முழுவதும் வெளிப்புற தூசு, அழுக்கு, கிருமி என பலவாறு உங்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும். அவற்றை இரவு தூங்குவதற்கு முன் களைய வேண்டும். ஏனென்றால் இரவில்தான் திசுக்கள் வளர்ச்சி பெறும். எனவே நன்றாக முகம் கழுவி விட்டு படுங்கள்.

எந்த நீரில் கழுவுகிறீர்கள் : அதிக குளிர்ந்த நீர் மற்றும் சூடான நீர் இரண்டுமே சருமத்தை பாதிக்கக் கூடியவை. எரிச்சல் சுருக்கம் ஆகியவ்ற்றை உண்டாக்கும். ஆகவே உங்கள் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ரெட்டினால் மற்றும் மாய்ஸ்ரைஸர் : 40 வயதிற்கு பின் ரெட்டினால் க்ரீம் உபயோகியுங்கள். இது கொலாஜன் உற்பத்தியை பெருக்கும். கொலஜான உடைவதையும் தடுக்கும். இதனால் சருமம் தளர்வடையாமல் இருக்கும். தினமும் இரவு தூக்குவதற்கு முன் முகம் கழுவியபின் ரெட்டினால் உபயோகிக்கவும் அதன் பின் மாய்ஸ்ரைஸர் தடவுங்கள் இவை இரண்டுமே உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

காட்டன் தலையணை கூடாது! நீங்கள் படுக்கும் விதமும் உங்கள் முதுமைக்கு காரணம் என்பது தெரியுமா? ஒரு பக்கமாக கன்னத்தை அழுந்த வைத்து தொங்கக் கூடாது. இது சுருக்கத்தை உண்டாக்கும். அதே போல் பருத்தியாலான தலையணை விட, சில்க் மற்றும் செட்டின் ரக துணியினாலான தலையணையே நல்லது. சுருக்கங்களையும் எரிச்சலையும் சருமத்திற்கு தடுக்கும்.

தூங்குவதற்கு முன் என்ன செய்கிறீர்கள் கண்டிப்பாக படுக்கையில் படுத்தபடி மொபைல் நோண்டிக் கொண்டிருக்கிறீர்களா? இது மிகவும் மோசமான செயல். ஏனென்றால் சரும புத்துயிர்க்கு நல்ல தூக்கமும் அவசியம். அலைபேசியில் எரியும் நீல ஒளி மூளையில் நரம்புகளை தூண்டுவதால் அவை மெலடோனின் சுரப்பை குறையச் செய்கிறது. இதனால் தூக்கம் தடைபடும். கருவளையம் மற்றும் சுருக்கம் உண்டாகும்.

sleeping 03 1478171010

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button