27.3 C
Chennai
Sunday, May 19, 2024
patham 12582
கால்கள் பராமரிப்பு

பித்தவெடிப்புக்கு சொல்லலாம் குட் பை!

பெண்கள், தங்கள் மீது எவ்வளவு கவனம்வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பாதங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். எல்லோருக்காகவும் தனது நேரத்தை அர்ப்பணிக்கும் பெண்கள், தனக்காக என்று யோசிப்பதே இல்லை. கவனமின்மையால் அவர்கள் இழக்கும் வனப்பு, அடுத்தடுத்து உடல் நலக்குறைபாடுகளுக்கு வழி வகுக்கிறது. தாமரைப் பூக்களுக்கு ஒப்பாகக் கூறப்படும் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்புக்குத் தீர்வாக, பாதங்களைத் தங்கத்துக்கு நிகராகப் பராமரிப்போம் பெண்களே! இதோ, அழகியல் நிபுணர் உமா மைதிலி தரும் டிப்ஸ்.உமாமைதிலி

“இளம் வயது பெண்களுக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் பாதவெடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இன்மையே இதற்கு முதல் காரணம். உணவில் நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர்ப்பதால், நாளடைவில் பாதவெடிப்பு குணப்படுத்த முடியாத நிலையை எட்டுகிறது.

தண்ணீர் குறைவாகக் குடிப்பது மற்றும் வொர்க் டென்ஷன் ஆகியவையும் பாதவெடிப்புப் பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கிறது. பாதங்கள் வெளியில் தெரிவதால், அதில் உள்ள ஈரப்பசை போய் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் குதிகால் பகுதியில் வெடிப்பு உண்டாகிறது. வறட்சியான சருமம் உள்ளவர்கள், அதிக தண்ணீர் குடிப்பதோடு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும்.
patham 12582

உடல் எடை அதிகமாக இருப்பதும் குதிகாலில் வெடிப்பை ஏற்படுத்தும். பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், இப்பிரச்னை தொற்றிக்கொள்கிறது. உடல் எடையைக் குறைப்பதே இதற்குத் தீர்வாகும். பெண்கள் நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதாலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் வெளியேறிவிடுகிறது. துணி துவைப்பது, சமையல் அறை உள்ளிட்ட வேலைகளைச் செய்யும்போது பாதம் ஈரத்தில் இருந்தால், பாதவெடிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பாத வறட்சியுடன் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பாதவெடிப்பை பெரிதாக்குவதால், குதிகால் வலி, வெடிப்பில் ரத்தக் கசிவும் ஏற்படலாம்.

பித்தவெடிப்புப் பிரச்னை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.

* பாதவெடிப்பில் உள்ள டெட் செல்கள் நீங்குவதற்கான கிரீம் பயன்படுத்தி, ஸ்கிராப் மூலம் தேய்த்து நீக்கலாம். டெட்செல்கள் நீங்கிய பின் பாதவெடிப்பு போவதற்கான மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.

paatham 5 jpg 11448

* வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள், மிதவெப்பமான தண்ணீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து, டெட் செல்களை நீக்கலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளைத் தேய்த்துவிடலாம்.

* விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் எடுத்து, அத்துடன் மஞ்சள் கலந்து, இரவில் கால்களில் அப்ளை செய்யலாம்.

* மெழுகுடன், சம அளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு குழைத்துக்கொள்ளவும். அதை, குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவி, அதன்மீது லேசான துணி போட்டு பாதுகாக்கலாம். இந்த கிரீமைப் பயன்படுத்தியபடி இரவில் தூங்கப் போகும் முன் சாக்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* சித்தமருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரத்தை வாணலியில் போட்டு பொறித்துக்கொள்ள வேண்டும். பாப்கார்ன் போல பொறிந்த பின் அத்துடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதங்களில் தடவி வர, பித்த வெடிப்பு விரைவில் மறைந்துவிடும்.

* பித்த வெடிப்பு அதிகரிக்காமல் தடுக்க, தரமான காலணிகளைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம்.

* பித்த வெடிப்பு ஏற்பட்ட உடனே அதை தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் விட்டால்கூட மீண்டும் வெடிப்பு அதிகரித்து துன்புறுத்தும்.

Related posts

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

குதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

வேப்பிலை பயன்படுத்தி எப்படி குதிகால் வெடிப்பை குணப்படுத்த முடியும்?

nathan

உங்களுக்கு தெரியுமா பாத பித்த வெடிப்பை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

பாத வெடிப்பில் இருந்து விடுபட…

nathan

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan

அழகான கால்கள் வேண்டுமா?

nathan

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

nathan

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan